உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசித் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசித் தேசாய்
பிறப்பு16 மே 1951 (1951-05-16) (அகவை 73)[1][2]
வதோதரா, குசராத் , இந்தியா
இசை வடிவங்கள்பின்னணி பாடுதல், இந்தியப் பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1969–இன்றுவரை

ஆசித் தேசாய் (பிறப்பு:16 மே 1951) இந்திய இசையமைப்பாளரும், பாடகரும், இசைக்கலைஞரும், இசை இயக்குநரும் ஆவார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், நடனத் தயாரிப்புகள், நாடகங்கள் ஆகியவற்றிற்கு இசையமைப்பவர். [3] குஜராத்தி சுகம் சங்கீதக் கலைஞர் என்று அழைக்கப்படுகிறார். [4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஆசித் 1951 இல் பம்பாய் மாநிலத்தின் பரோடா (இப்போது குஜராத் வதோதராவில்) குஞ்ச்பிகாரி, மயூரிபென் தேசாய் ஆகியோருக்குப் பிறந்தார். ஆரம்பத்தில் தனது பெற்றோரிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார். [2] வர்த்தகத்தில் பட்டம் பெற்றதுடன் பரோடா எம். எஸ். பல்கலைக்கழகத்தில் குரலிசையில் பட்டயப்படிப்பு முடித்தார். தொழில் வாய்ப்புகளுக்காக மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

ஆசித் நாடகங்களுக்கும், நடனப் போட்டிகளுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சீதர் மேதை பண்டிட் இரவிசங்கர் இவரை ஆசிய விளையாட்டுக்கு இசையமைப்பதில் சேர்த்தார். மேலும் பண்பாட்டு நிகழ்வுகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புக்கான பொறுப்பில் ஆசித்தை நியமித்தார். தூர்தர்சனில் ஒளிபரப்பான இந்தித் தொலைக்காட்சித் தொடரான சாணக்கியாவில் இசையமைத்ததற்காக இவர் பரவலான பாராட்டைப் பெற்றார். இரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி திரைப்படத்திற்கான பக்திப் பாடல்களை இவர் பாடியுள்ளார். 1988 இல், மாஸ்கோவில் நடந்த இந்திய விழாவின் நிறைவு விழாவில் இரவிசங்கர் இசைக்குழுவின் பாடல்களை இசைத்தார். 1989 [2] இல், இரவிசங்கரின் பாலே கனசயம் இசைக்குழு நடத்துனராகவும் பாடகராகவும் உதவினார். இவர் அமிதாப் பச்சன் தயாரித்த விருத் பேமிலி கம்ஸ் பர்ஸ்ட் என்ற இந்தித் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்..   [citation needed]

விருதுகள்

[தொகு]
  1. 1969 இல் அகில இந்திய வானொலியின் சிறந்த பாடகர் விருது (18 வயதில்) [2]
  2. 1976இல் குஜராத் மாநில விருது [2]
  3. இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆசியத் தடகளத்தில் சோதிப் பதக்கம் [2]
  4. 1989 இல்"பண்டிட். ஓம்கார்நாத் தாகூர் விருது". (குஜராத் மாநிலம்) [3]
  5. 2017-சங்கீத நாடக அகாதமி விருது (வகை: நடனத்திற்கான இசை) [5]
  6. குஜராத்தி தொலைக்காட்சி தொடரான "சுரத்தா" க்கு சிறந்த இசை இயக்குநருக்கான விருது [3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பாடகியான ஹேமா தேசாயை மணந்தார்.[6] இவர்களின் மகன் அலப் தேசாய் [3] ஒரு இசைக் கலைஞராவார். அவரது ஆல்பமான பெச்பெக்சன் குளோபல் இந்திய இசை அகாதமி விருதுகள்-2016 இல் சிறந்த கஜல் ஆல்பம் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது.

திரைப்படவியல்

[தொகு]

இசையமைப்பாளராக

[தொகு]
  1. யோகா- வெளியீடு (2004) [7]
  2. அனுமான் வந்தனா (2007) [3]
  3. [8]ஹேம மாலினி நடித்த பாலே "கணகா" (2019).
  4. [8]ஹேம மாலினி நடித்த பாலே "கீத் கோவிந்த்" (2014) [9].
  5. நரசி[10] மேத்தாவின் பாடல்கள் (1996) நவரசு பதிவுகள்.
  6. [10] ஜெய் ஸ்ரீநாதாஜி (1995) நவரசு பதிவுகள்.

ஒலிப்பதிவு

[தொகு]
  1. இராக் இசைக்குழு (வீடியோ கேம் 2007) [11]

தயாரிப்பாளராக

[தொகு]
  1. பெக்சான் (2015) [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anup at Ashit Desai's b-day celebration - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Ashit Desai biography". Last.fm (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-08."Ashit Desai biography".
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 ♫ Hanuman Vandana - Ashit, Hema and Alap Desai. Listen @cdbaby, பார்க்கப்பட்ட நாள் 2019-10-08
  4. "Ashit Desai". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  5. "In pictures: Sangeet Natak Akademi Awards 2017, the complete winners' list". https://www.business-standard.com/article/current-affairs/in-pictures-sangeet-natak-akademi-awards-2017-the-complete-winners-list-119020601124_1.html. 
  6. "'Divine power inspires me to create music': Ashit Desai". SBS Your Language (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  7. Yoga Unveiled, பார்க்கப்பட்ட நாள் 2019-10-08
  8. 8.0 8.1 "Hema Malini: 'Ganga' wouldn't have been possible without Bhushan and Asit - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  9. "Hema Malini editorial photography. Image of govind, dancer - 48617602". Dreamstime (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  10. 10.0 10.1 The Garland Encyclopedia of World Music: The World's Music: General Perspectives and Reference Tools.
  11. Rock Band, பார்க்கப்பட்ட நாள் 2019-10-08
  12. Pehchaan Featuring Alap Desai, பார்க்கப்பட்ட நாள் 2019-10-08

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசித்_தேசாய்&oldid=3905316" இலிருந்து மீள்விக்கப்பட்டது